தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும்- வானிலை மையம் தகவல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.
இதனால், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை வறண்ட வானிலையே நிலவும்.
நாளை முதல் 29ஆம் திகதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50km வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவே மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |