அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.., எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி ஒன்றாம் திகதி தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மாவட்டத்திலும், கொடைக்கானல் மலைப் பகுதிகளிலும் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும், அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65km வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |