வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.., 2 நாட்களுக்கு கனமழை: எந்தெந்த பகுதியில்?
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு மநாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் கூறியதாவது..
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21ம் திகதி தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் நாளை(ஜன.4) மற்றும் நாளை மறுநாள்(ஜன.5) என 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |