வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை.., தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?
வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் தகவல்..,
வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, 21ஆம் திகதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 5 நாட்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது.

கடலோர தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பத்துடன் காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்களுக்கு உடல் ரீதியான அசௌகரியங்கள் ஏற்படக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் புழுக்கம் சற்று கூடுதலாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |