பிரித்தானியாவில் பயங்கரமாக தீ பற்றி எரிந்து சாம்பலான ரயில்! வெளியான வீடியோ
பிரித்தானியாவில் சரக்கு ரயில் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்டில் உள்ள Sevenoaks அருகே ரயில் தீ பிடித்து எரிந்துள்ளது.
காலை 5.15 மணிக்கு டன்டன் கிரீன் ரயில் நிலையத்திற்கு அருகே சரக்கு ரயில் ஒன்று தீ பற்றி எரிவதாக கென்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 தீயணைப்பு வாகனத்துடன் சம்பவயிடத்திற்கு விரைந்த வீரர்கள் 2 மணிநேரத்திற்கும் மேலாக போராடி 7.45 மணிக்கு தீயை அணைத்துள்ளனர்.
எதனால் தீ ஏற்பட்டது என்பது குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகிவில்லை.
அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடுமாறு தீயணைப்பு துறை வலியுறுத்தியுள்ளது.
@Kent_Online @bbcsoutheast @7OaksChronicle Service train on fire between Sevenoaks and Dunton Green pic.twitter.com/dchCe3d3F6
— Alan North (@NorthGooner) April 23, 2021
தீ விபத்து காரணமாக அப்பாதையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதால் Orpington, Sevenoaks அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Looks like the crew are all out. This is a drivers worse nightmare. There going to hours of delays through #DuntonGreen while @kentfirerescue help @NetworkRailSE get the railway back up and running for @Se_Railway pic.twitter.com/bQXe0qpR1s
— PatrickF1 (@HammertimeLH44) April 23, 2021
மதியம் 12 மணி வரை அப்பாதையில் ரயில் சேவை இருக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயிலுக்கு பதிலாக பேருந்து சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.