தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும்.., எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
சத்தீஸ்கர் முதல் மன்னார் வளைகுடா வரை தெலங்காணா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தென் தமிழகம், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், வரும் 10, 11 ஆகிய திகதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 12ஆம் திகதி லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36-37°C ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°C ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |