தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.., எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, மாநிலத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இன்று குறிப்பாக 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதன்படி, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து மேகமூட்டத்துடன் கூடிய சூழல் நிலவுவதால், பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |