தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.., எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வடக்கு தமிழகம், தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு- தென்கிழக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை வாய்ப்புள்ளது.

மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50km வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் என்றும் கூறப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |