வெள்ளத்தில் மிதக்கும் மதுரை.., நள்ளிரவிலும் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி
மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை தொடர்பாக நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டார்.
உதயநிதி ஆலோசனை
மதுரை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் மாலை வரை கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மதுரை மாநகராட்சி 10ஆவது வார்டு பகுதியான பாரத் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மழைநீரில் மூழ்கியது.
மேலும், ஒவ்வொரு பகுதிகளிலும் இடுப்பு அளவில் தண்ணீர் தேங்கியதால் அங்குள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்நிலையில், கனமழை தொடர்பாக மக்களை மீட்பது, நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பான ஆலோசனையை துணை முதலமைச்சர் உதயநிதி நேற்று இரவு மேற்கொண்டார்.
அவர், முகாம் அலுவலகத்திலிருந்துகாணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையில் பேசிய உதயநிதி, "மழை பாதிப்பு குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |