தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை- வானிலை மையம் தகவல்
இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
இதன்காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று(டிச.12) முதல் (டிச.17) வரை தமிழகத்தில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் அதிகபட்ச வெப்பநிலை 32°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25°C இருக்கக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே குறிப்பிட்ட இந்த 6 நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |