தமிழக கடற்கரைப் பகுதியில் உருவாகிய காற்றழுத்தம்.., 22 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு கடற்கரைப் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 26ஆம் திகதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |