தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும்.., எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை தொடரும்.
குறிப்பாக, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

அதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டத்திலும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் நாளை பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் நகரின் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |