தினேஷ் கார்த்திக்கின் கனவில் விளையாடிய மழை! ஏமாந்த ரசிகர்கள்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி, 3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நேற்று இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடந்தது.
இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றிருந்ததால் இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால், ரசிகர்களிடையே இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.
அதே போல், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் மிரட்டிய தினேஷ் கார்த்திக், இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார். பெங்களூரு ரசிகர்களும் அவரது ஆட்டத்தினை கண்டுகளிக்க ஆர்வமாக இருந்தனர். ஆனால் அனைவரது கனவையும் தவிடுபொடியாக்கும் வகையில் மழை குறுக்கிட்டது.
Photo Credit: BCCI
இதனால் ஆட்டம் தொடங்க தாமதமானது. ஒரு வழியாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Photo Credit: AP Photo
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் கோப்பையை பகிர்ந்துகொண்டன. இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தொடர் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
Photo Credit: Twitter