தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்யும்.., எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக் கடல் வரையிலும், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் வழியாகவும் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல், நாளை முதல் 29ஆம் திகதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |