தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் தொடரும் மழை: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் மழை
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
PTI
இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |