CSK அணியால் புறக்கணிக்கப்பட்ட போதும் தனது ஆதரவை தந்த சுரேஷ் ரெய்னா! நெகிழும் ரசிகர்கள்
கண்டு கொள்ளாத சிஎஸ்கே அணி! ஆனாலும் தனது ஐபிஎல்லில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா தனது ஆதரவு என்றும் சிஎஸ்கே அணிக்கே என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபடுகின்றனர். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சில நாட்களாக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில், அனுபவ வீரர்கள் மற்றும் சில முக்கிய இளம் வீரர்களையும் அணியில் இணைத்துக் கொண்டது சிஎஸ்கே.
ஆனால், ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரரும், சென்னை அணிக்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல், ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டுள்ள சுரேஷ் ரெய்னாவையும், சிஎஸ்கே ஏலத்தில் எடுக்காமல் போனது, அதிகம் கேள்விகளை எழுப்பி இருந்தது.
பல சீனியர் வீரர்களை அணியில் எடுத்த சிஎஸ்கே, ரெய்னாவை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. அது மட்டுமில்லாமல், எந்த அணிகளும் ரெய்னாவை எடுக்காததால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் ரெய்னா பெயர் டிரெண்ட் ஆகிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதன்படி சென்னை அணியில் இடம்பெற்றுள்ள ராபின் உத்தப்பா, பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவினை சிஎஸ்கே வெளியிட்டிருந்தது.
இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உத்தப்பா பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்த நிலையில், ரெய்னாவும் "Best Wishes Brother" என கமெண்ட் செய்துள்ளார்.
இதன் மூலம் ரெய்னாவை சிஎஸ்கே அணி எடுக்காமல் போனதால், அவருக்கும், அணி நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம் என்ற வதந்தி சுக்கு நூறாக உடைந்துள்ளது என்றும் ரெய்னாவின் ஆதரவு சென்னை அணிக்கே என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.