IPLலில் மீண்டும் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா: உற்சாகத்தில் மிதக்கும் ரசிகர்கள்
இந்த ஆண்டு நடைபெற்ற IPL வீரர்களின் ஏலத்தில் முன்னாள் சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா விலைபோகாத நிலையில், அவரை தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டுக்கான ipl வீரர்கள் ஏலம் கடந்த மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெற்று முடிந்தது.
இதில் Mr.IPL என கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை, இதனால் அவரால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ipl போட்டியில் விளையாடமுடியாத சூழல் ஏற்பட்டது.
இந்தநிலையில் இந்த ஆண்டு ipl போட்டிகளில் புதிதாக இணைக்கப்பட்ட ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியின் முன்னணி வீரர் ஜேசன் ராய் காயம் காரணமாக ipl போட்டிகளில் இருந்து விளக்கியுள்ளார்.
இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் அனுபவ வீரர்கள் என்று யாரும் பெரிதாக இல்லாத நிலையில், ஜேசன் ராய்க்கு பதிலாக iplலில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் டாப் 5வது இடத்தில் இருக்கும் சுரேஷ் ரெய்னா அணியில் சேர்த்துக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரரான ஜேசன் ராய்யின் இடத்தில், மேத்யூவ் வேட்யை களமிறங்க செய்துவிட்டு, சுரேஷ் ரெய்னாவை மிடில் ஆர்டரில் களமிறக்கலாம் என திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹார்டிக் பாண்டியாக்கு இதுவரை கேப்டன்சியில் அனுபவம் இல்லாததால், அவருக்கு சுரேஷ் ரெய்னா உறுதுணையாக இருக்கக்கூடும் எனவும் அணி நிர்வாகம் கருதுவதால் சுரேஷ் ரெய்னாவை தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாக தகவல் வெளிவந்துள்ளது.