எனது ஓய்வுக்கு காரணம் தோனியா? உண்மையை போட்டுடைத்த சுரேஷ் ரெய்னா
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கான காரணத்தை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தற்போது தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி வீரராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பல போட்டிகளில் வெற்றி பெற வைத்தார்.
ஆனால் 2021ஆம் ஆண்டு சீசனில் அவர் CSK அணியில் விளையாடவில்லை. அதேபோல் ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை.
Twitter (CSK)
அதனைத் தொடர்ந்து ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் உங்களுக்கும், தோனிக்கும் எதாவது பிரச்சனையா? என்றும், ஏன் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டீர்கள்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
குடும்பம் தான் முக்கியம்
அதற்கு பதில் அளித்த ரெய்னா, 'எனக்கும் தோனிக்கு பிரச்சனையா என்பதை நீங்கள் தோனியிடம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நான் ஓய்வு பெற்றதற்கு அது காரணம் கிடையாது. சர்வதேச போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு, எனக்கு மற்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஊக்கம் கிடைக்கவில்லை' என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் சிறுவயது முதல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்ததால் குடும்பத்துடன் நேரம் செலவிட்டது கிடையாது என்றும், தற்போது குடும்பம் மற்றும் பெற்றோரை கவனித்துக் கொள்ள ஐபிஎல் ஓய்வு முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
ரெய்னா 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5528 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 39 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |