CSK அணியின் அடுத்த கேப்டன் யார்? முன்னாள் வீரரின் கணிப்பு
ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என நம்புவதாக முன்னாள் வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெறும் டோனி?
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் வரும் 31ஆம் திகதி தொடங்குகிறது. 41 வயதாகும் டோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடர் இது என்று கூறப்படுகிறது.
சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டோனி ஓய்வு பெற்றால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி நிலவுகிறது.
@BCCI
CSKயின் அடுத்த கேப்டன்
இந்த நிலையில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இளம் வீரர் ஒருவர் கேப்டன் பொறுப்புக்கு சரியாக இருப்பார் என கணித்துள்ளார். அவர் கூறுகையில்,
'டோனிக்கு பிறகு CSK அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்பார் என நம்புகிறேன். அவர் CSK மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். இளம் வீரர் என்பதால் அவருக்கு CSK கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். ருதுராஜ், உங்களின் CSK கேப்டன் பொறுப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.
@Bcci/IPL
@File Photo/CSK
@Michael Steele/Getty Images