கனமழைக்கு வாய்ப்பு... இந்த ஆறு பொருட்களை சேமித்து வைக்க பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தல்
இன்று இரவு பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் வீடுகளில் இந்த ஆறு அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு
தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்குள் 50 மிமீ மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) இரவு 9 மணி முதல் வியாழக்கிழமை காலை 9 மணி வரை மஞ்சள் வானிலை எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் உத்தியோகப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், புதன்கிழமை இரவு முதல் வியாழன் காலை வரை பலத்த மழை, அல்லது இடியுடன் கூடிய மழை சில பகுதிகளில் பெய்யக்கூடும். மட்டுமின்றி, வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் விரைவாக வெள்ளத்தில் மூழ்குவதற்கான சிறிய வாய்ப்பும் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மேலும், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் வகையில், ஆறு முக்கியமான பொருட்களைக் கொண்ட அவசரகால அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு குடியிருப்பாளர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
குடியிருப்பாளர்களுக்கு பொருந்தும்
இந்த எச்சரிக்கையானது லண்டன், தென்கிழக்கு பிரித்தானியா, தென்மேற்கு பிரித்தானியா மற்றும் பிற பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
முதலுதவி பெட்டி, உதிரி பேட்டரிகளுடன் டார்ச், நீர்ப்புகா ஆடைகள், குடிநீர் போத்தல்கள், Wind-up radio அத்துடன் காப்பீட்டு ஆவணங்களும் பாதுகாக்க அறிவுறுத்தியுள்ளனர்.
காப்பீட்டு ஆவணங்களுடன் தொடர்பு எண்களின் பட்டியல் ஒன்றையும் தனியாக பாதுகாக்க அறிவுறுத்தியுள்ளனர். தண்ணீர் போத்தல்களுடன் நொறுக்குத்தீனியும் இருப்பு வைத்துக்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளுக்கான உணவும் இருப்பு வைக்க கோரியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |