கனடாவில் கல்வி கட்டண உயர்வுடன் பிரஞ்சு மொழியும் கட்டாயம் என்று அறிவித்த மாகாணமொன்று
கனடாவின் கியூபெக் மாகாண நிர்வாகம், வெளி மாகாண மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டதுடன் பிரஞ்சு மொழியும் கட்டாயம் என அறிவித்துள்ளது.
பின்னடைவை சந்திக்கும்
தொடர்புடைய திட்டத்தால் ஆங்கிலவழி 3 பல்கலைக்கழகங்கள் பின்னடைவை சந்திக்கும் என்ற எதிர்ப்புக் குரலும் எழுந்துள்ளது. ஆனால் பிரஞ்சு மொழியை வளர்க்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டம் இதுவென்றே மாகாண நிர்வாகம் பதிலளித்துள்ளது.
@getty
கியூபெக் மாகாண நிர்வாகத்தின் இந்த திட்டமானது அடுத்த ஆண்டில் அமுலுக்கு வர உள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கியூபெக்கின் உயர்கல்வி அமைச்சர் பாஸ்கேல் டெரி தெரிவிக்கையில்,
அடுத்த ஆண்டு முதல் வெளி மாகாண மாணவர்களுக்கு கல்வி கட்டணமானது ஆண்டுக்கு 12,000 கனேடிய டொலராக உயர்த்தப்படும் என்றும், அக்டோபரில் மாகாண நிர்வாகம் முதலில் முன்மொழிந்த கட்டணத்தை விட இந்த 33 சதவீத உயர்வு குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் கியூபெக் மாகாணத்தில் உள்ளூர் மாணவர்களுக்கான சராசரி கல்விக் கட்டணம் சுமார் 6,500 கனேடிய டொலர் என்றே கூறப்படுகிறது. மேலும், வெளி மாகாண மாணவர்கள் 80 சதவீதம் பேர்கள் அவர்கள் பட்டம் பெறுவதற்குள் பிரெஞ்சு மொழியின் இடைநிலை நிலையை அடைய வேண்டும் என்றும் மாகாண நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டுக்கு 150 மில்லியன்
இந்த இலக்கு எட்டப்படவில்லை என்றால், தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் McGill பல்கலைக்கழக தலைவர் Deep Saini தெரிவிக்கையில்,
Credit: usnews
கியூபெக் மாகாண நிர்வாகத்தின் இந்த முடிவானது, மாகாணத்தின் 3 ஆங்கிலவழி பல்கலைக்கழங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் என்றார். மேலும், ஏற்கனவே புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் சரிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள Concordia உள்ளிட்ட இரு பல்கலைக்கழகங்கள்,
மாகாண நிர்வாகத்தின் இந்த முடிவு ஆண்டுக்கு 150 மில்லியன் கனேடிய டொலர் அளவுக்கு இழப்பை தங்களுக்கு ஏற்படுத்தும் என முறையிட்டுள்ளனர். அத்துடன், 700 வேலை வாய்ப்புகளையும் இழக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |