மாணவர் ஒருவரின் விசித்திரமான யோசனை... அவர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ 80,000 கோடி
அமெரிக்காவின் லூசியானா மாகாண பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் விசித்திரமான யோசனையால் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ 80,000 கோடி.
பலராலும் புறக்கணிக்கப்பட
லூசியானா மாகாண பல்கலைக்கழக மாணவரான Todd Graves ஒரு விசித்திரமான யோசனை ஒன்றை 1990களில் முன்வைத்தார். அதாவது தாம் புதிதாக திறக்கவிருக்கும் உணவகத்தில் chicken fingers மட்டுமே பரிமாறப்படும்.
ஆனால் அவரது இந்த யோசனைக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதுடன், பலராலும் புறக்கணிக்கப்பட்டது. இருப்பினும் தனது திட்டத்தில் முழு நம்பிக்கை அவருக்கு இருந்தது. பட்டப்படிப்பை முடித்ததும் அவர் கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தார்.
தமது கனவு திட்டத்தை நிறைவேற்ற நிதி திரட்டும் பொருட்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நீண்ட பல மணிநேரம் பணியாற்றினார். மட்டுமின்றி அலாஸ்காவில் மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டார். இறுதியில் தமது சொந்த சேமிப்பு தொகையில் 50,000 டொலர் முதலீடு செய்ய முடிவு செய்தார்.
அத்துடன் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என 100,000 டொலர் திரட்டினார். 1996ல் லூசியானாவின் Baton Rouge பகுதியில் தமது முதல் Raising Cane உணவகத்தை Todd Graves திறந்தார்.
இப்படியான தொழில் ஒன்றை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லாத போதிலும், அதை வெற்றியடையச் செய்ய தினமும் காலை 8 மணி முதல் அடுத்த நாள் விடிகாலை 3.30 மணி வரை அயராது உழைத்தார்.
900க்கும் மேற்பட்ட பகுதிகளில்
காலப்போக்கில், எவ்வாறு ஊழியர்களை பணியமர்த்துவது மற்றும் பயிற்சியளிப்பது என்பதைக் கற்றுக்கொண்டார், மேலும் அவரது வணிகம் வளரத் தொடங்கியது. இன்று Raising Cane உணவகங்கள் உலகம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் 3.7 பில்லியன் டொலர் தொகைக்கு விற்பனை நடந்துள்ளது. தற்போது 52 வயதாகும் Todd Graves தமது நிறுவனத்தின் 90 சதவிகித பங்குகளை சொந்தமாக கொண்டுள்ளார். மட்டுமின்றி, குடும்பத்தவரல்லாத முதலீடுகள் வேண்டாம் என்ற முடிவிலும் உள்ளார்.
அத்துடன் தமக்கு பிறகு தமது பிள்ளைகளிடம் ஒப்படைக்கவும், அவர்களும் தமது கொள்கையை பின்பற்றுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 2024 இறுதிக்குள் ஆண்டு விற்பனை என்பது 5.1 பில்லியன் டொலர் தொகையை எட்டியதுடன், உலகம் முழுக்க 1,600 உணவகங்கள் மற்றும் ஆண்டு விற்பனை என்பது 10 பில்லியன் டொலர்களை எட்ட வேண்டும் என்றும் திட்டமிட்டு வருகிறார்.
Raising Cane உணவகங்கள் தொடங்கப்பட்டு இது 28வது ஆண்டு. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 107வது இடத்தில் Todd Graves இடம்பெற்றார்.
Raising Cane உணவகங்களின் மொத்த மதிப்பு 9.5 பில்லியன் டொலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 80,000 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |