முக அழகை மேம்படுத்த மருத்துவரிடம் சென்ற நடிகை ரைசாவுக்கு நேர்ந்த விபரீதம்! தற்போது அவர் மேற்கொண்ட அதிரடி செயல்
தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததாக கூறி ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மருத்துவர் பைரவி செந்திலுக்கு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழில் பியார் பிரேம காதல், வேலை இல்லா பட்டதாரி 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் ரைசா வில்சன். இவர் பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக அறியப்பட்ட ரைசா சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.
அதில் மருத்துவர் பைரவி முகப்பொலிவுக்கு செய்த தவறான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் இதுகுறித்து மருத்துவரை தொடர்பு கொண்டு முயன்றபோது அவர் வெளியூர் சென்று விட்டதாக அலட்சியமாக சொல்லப்பட்டதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த சூழலில் டிராக்டர் பைரவி மீது ரைசா கொடுத்த புகார் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும்.
இதை பயன்படுத்தி ரைசா என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று டாக்டர் பைரவி செந்தில் நடிகை ரைசா மீது பதில் குற்றச்சாட்டை வைத்தார்.
இந்நிலையில் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முகப்பொலிவு சிகிச்சையை தவறாக செய்துள்ளதாக கூறி மருத்துவர் பைரவி செந்திலிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக நடிகை ரைசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.27 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகப்பொலிவு பெறாமல் ரத்த கசிவு, வீக்கம் தான் ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது.
15 நாளில் இழப்பீடு தராவிடில் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் ரைசா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.