திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க பாய்ந்து வருகிறார்கள் - அமைச்சர் ராஜ்மோகன்
raj mohan accuse dmk mlas comes to beat in assembly : திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்க பாய்ந்து வருகிறார்கள் என சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியுள்ளார்.
தவெக எம்.எல்.ஏ முஸ்தபா சர்ச்சை பேச்சு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ மதார் முஸ்தபா திமுகவை விமர்சிக்கும் போது சர்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். சபாநாயகர் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.

முஸ்தபா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கடும்அமளியில் ஈடுபட்டனர்.
திமுக எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து ஆவேசமாக முன்னால் வந்து அமளியில் ஈடுபட்டனர்.

திமுக கொறடா எ.வ.வேலு அவர்களை சமாதானம் செய்து இருக்கையில் அமருமாறு அறிவுறுத்தினார்.
பூண்டி கலைவாணன் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே சென்று இது குறித்து முறையிட்டார்.
அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு
இதனையடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் ஆளும் கட்சி உறுப்பினர்களை நோக்கி அடிக்க பாய்ந்து வருகின்றனர்.

இது போன்ற உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் தவெக ஒரு போதும் பயப்படாது. இது போன்ற அநாகரீகமான செயல்பாடுகளால் தான் திமுகவுக்கு மக்கள் தகுந்த தீர்ப்பு கொடுத்து எதிர்கட்சியாக உட்கார வைத்துள்ளார்கள்" என கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |