தேனிலவு கொலை வழக்கு: மகனை இழந்த தாய் தெரிவித்துள்ள கருத்து
தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற பெண்ணொருவர் வழக்கு, வட இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வழக்கு
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும் சியா கோயல் (20) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
தனது பிறந்தநாளைக் காரணம் காட்டி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற சியா, தன் காதலனான சேத்தன் சௌத்ரி (22) என்பவருடைய உதவியுடன் பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்தார்.

இந்த வழக்கு பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், இந்திய ஊடகங்கள் இந்த வழக்கை கடந்த ஆண்டு நடைபெற்ற தேனிலவுக் கொலையுடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டுவருகின்றன.
தேனிலவுக் கொலை வழக்கு
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) கடந்த ஆண்டு மே மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் காணாமல் போன ராஜா, பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையில், ராஜாவை கொலை செய்தது அவரது மனைவியான சோனம் என்பது தெரியவந்தது. தனது காதலனான ராஜ் குஷ்வாஹா, அவரது நண்பர்களான விஷால் சௌகான், ஆனந்த் குமார், ஆகாஷ் தாக்கூர் ஆகியோர் உதவியுடன், திட்டமிட்டு ராஜாவைக் கொலை செய்திருந்தார் சோனம்.
அந்த வழக்கு மேகாலயா தேனிலவுக் கொலை வழக்கு என்றே அழைக்கப்படுகிறது.
மகனை இழந்த தாய் தெரிவித்துள்ள கருத்து
இந்நிலையில், சேத்தன் கொலை வழக்கு குறித்து அறிந்துகொண்ட, ராஜாவின் தாயான உமா ரகுவன்ஷி, சியா கோயலின் முகமும், உடல் மொழியும், தனக்கு தன் மகனைக் கொன்ற சோனத்தை நினைவுபடுத்தியதாக தெரிவித்துள்ளார்.
சியா ஒரு மினி சோனம் என்று கூறியுள்ள உமா, தான் செய்த குற்றத்துக்காக அவருக்கு கொஞ்சமேனும் வருத்தம் இருப்பதாகத் தோன்றவில்லை என்றும், தன் மகனைக் கொன்ற சோனமும் இதேபோல் எந்த வருத்தமும் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சோனம் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |