ஆன்லைன் வகுப்பில் மாணவிகளை ஆபாசமாக படம்பிடித்தேன்! பின்னர் செய்த செயல்.. விசாரணையில் புட்டு புட்டு வைத்த ஆசிரியர் ராஜகோபாலன்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் ஓன்லைன் வகுப்பில் மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து பின்னர் அதை மார்பிங் செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை கேகே நகர் பதம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் தொல்லை புகார் அளித்த நிலையில் புகாரின் அடிப்படையில் கடந்த 24ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது இதுவரை சுமார் 6 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆசிரியர் ராஜகோபாலனிடம் பொலிஸ் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஆன்லைன் வகுப்பில் மாணவிகளை ஆபாசமாக படம்பிடித்து அதை மார்பிங் செய்து அவர்களுக்கு அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராஜகோபாலனின் வாக்குமூலம் அடிப்படையில் இன்னும் சில ஆசிரியர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளை ஜூம் செய்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்து வந்தது அம்பலமாகியுள்ளது.
2 நாட்களில் கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், ஐந்து மாணவிகளிடம் இருந்து பெற்ற ஒவ்வொரு வாக்குமூலத்தையும் தனித்தனி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.