ரத்தன் டாடாவின் ரூ 10,000 கோடி உயிலில் இடம்பெற்ற ராஜன் ஷா... யாரிவர்
சமீபத்தில் மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ 10,000 கோடியை நிர்வகிக்கும் பொறுப்பினை ராஜன் ஷா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு ராஜன் ஷாவுக்கு
ரத்தன் டாடா இறக்கும் முன்னர் தயாரிக்கப்பட்ட அவரது உயிலில், பல பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ரூ 10,000 கோடி சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு ராஜன் ஷாவுக்கு வழங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ரத்தன் டாடா விரும்பியது போலவே காப்பகங்களுக்கான உதவிகளும் நன்கொடைகளும் தொடரும் என்றே உறுதியளிக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் சொத்துமதிப்பில் பெரும்பகுதி ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என் சந்திரசேகரன் தலைமையில் பல்வேறு தொண்டு முயற்சிகளுக்கு இந்த அறக்கட்டளை கவனம் செலுத்தும். ரத்தன் டாடாவின் தனிப்பட்ட சொத்துக்களில், சகோதரர் ஜிம்மி மற்றும் ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவர் உட்பட நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பங்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரத்தன் டாடாவின் நீண்ட கால சமையற்கலைஞர் ராஜன் ஷாவிற்கும் உரிய பங்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரத்தன் டாடாவின் ரூ 10,000 கோடி சொத்துக்களை இனி நிர்வகிக்கும் பொறுப்பையும் ராஜன் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடீஸ்வரர்கள் பட்டியலில்
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடன் இருந்த ராஜன் ஷா மற்றும் சமையல் உதவியாளர் சுப்பையா ஆகிய இருவருக்கும் உயில் எழுதி வைத்துள்ளார்.
ரத்தன் டாடாவுக்கு சொந்தமான 20 முதல் 30 உயர் ரக வாகனங்கள் அனைத்தும் தற்போது அவரது கொலாபா இல்லத்திலும் தாஜ் வெலிங்டன் மியூஸ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
புனேவில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் அருங்காட்சியகத்திற்காக இந்த கார்களை டாடா குழுமம் வாங்கலாம் அல்லது ஏலம் விடலாம் என்றே கூறப்படுகிறது.
சுமார் 100 பில்லியன் டொலர் மதிப்பு கொண்ட டாடா குழுமம் ஏன் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்றால், அந்த நிறுவனங்களில் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கான குறிப்பிட்ட அளவு பங்குகளே காரணம் என கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |