அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணி 203 ஓட்டங்கள் குவிப்பு: 3 வீரர்கள் அரை சதம்!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் 4வது போட்டியில் ஹைதராபாத்திற்கு எதிராக ராஜஸ்தான் அணி அதிரடியாக ஆடி 203 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி
16வது ஐபிஎல் சீசனின் 3வது நாளின் முதல் போட்டியில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றனர். கேப்டன் மார்க்ரம் இன்னும் அணியுடன் இணையாததால், இந்தப் போட்டிக்கு புவனேஷ்வர் குமார்(Buvanesh kumar) தலைமையேற்றுள்ளார்.
@sportzpics
இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் - ஜெய்ஸ்வால் இணை களமிறங்கியது.
சஞ்சு சாம்சன் அரை சதம்
தொடக்க முதலே இருவரும் அதிரடியாக விளையாட 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் ஓட்டம் 37ஆக இருந்தது.
இதன் பின்னர் வாஷிங்டன் சுந்தர் வீசிய 4வது ஓவரில் 19 ஓட்டங்களும், நடராஜன் வீசிய 5வது ஓவரில் 17 ஓட்டங்கள் விளாசினர். தொடர்ந்து 20 பந்துகளில் ஜோஸ் பட்லர்(jos buttler) அரைசதம் அடித்தார்.
@sportzpics
பின்னர் பட்லர் 54 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கேப்டன் சஞ்சு சாம்சன்(sanju samson) களமிறங்கினார். சஞ்சு சாம்சன் ஒரு பக்கம் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தாலும் மறு முனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்து கேட்ச் ஆனார். ஹெட்மயர் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆட ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் குவித்தது.
@sportzpics
ஆட்டமிழக்காமலிருந்த ஹெட்மயர் 16 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார்.
ஹைதராபாத் சார்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும் ஃப்ரோகி 2 விக்கெட்டுகளையும், மாலிக் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.