ஐபிஎல்லில் 16 கோடி ரூபாய் ஏலத்தில் போனதற்கு தகுதியானவர் என நிரூபித்த நட்சத்திர வீரர்! குவியும் பாராட்டு
ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை ராஜஸ்தான் வீழ்த்திய நிலையில் மோரிஸ்க்கு பாராட்டு குவிந்துள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மிரட்டலான வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான டேவிட் மில்லர் மற்றும் கிரிஸ் மோரிஸை முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள், ரசிகர்கள் என பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மோரீஸ் இந்த ஐபிஎல்லில் 16 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.