இரண்டாவது திருமணத்தால் பதவி இறக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி.., யார் அவர்?
குடும்பப் பிரச்னைகள் மற்றும் இரண்டாவது திருமணம் காரணமாக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பதவி இறக்கம்
இந்திய மாநிலமான ராஜஸ்தான் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான பங்கஜ் குமார் சவுத்ரி (Pankaj Kumar Chaudhary), குடும்ப பிரச்சினையின் விசாரணைக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு தனது பதவியில் இருந்து தரமிறக்கப்பட்டுள்ளார்.
அவரது நிலை 11 மூத்த ஊதிய விகிதத்தில் இருந்து நிலை 10 ஜூனியர் ஊதிய விகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது பொதுவாக புதிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும்.
ராஜஸ்தானில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பதவி இறக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
சவுத்ரியின் இரண்டாவது திருமணம் பற்றி அறிந்ததும் உயர் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது குடும்ப விவகாரம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கும் பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றது. அப்போது, ஐபிஎஸ் அதிகாரிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சவுத்ரி கூறுகையில், "இந்த வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது" என்று கூறினார். ஆனால், அதிகாரிகள் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
சவுத்ரி 2009 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தற்போது ஜெய்ப்பூரில் சமூகக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். இருப்பினும் பதவி இறக்கத்திற்குப் பிறகு, அவரது பதவி காவல் கண்காணிப்பாளர் (நிலை 10) என மாற்றப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |