2022 ஐபிஎல் போட்டியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்! ராஜஸ்தான் அணிக்கு பேரிழப்பு
2022 ஐபிஎல் போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் நாதன் கோல்டர் நைல் விலகியுள்ளார்.
காயம் காரணமாக நாதன் கோல்டர் நைல் ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் நைலை ரூ. 2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.
2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக நைல் ஒரே ஒரு போட்டியில் தான் விளையாடினார்.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி நைல், 3 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 48 ரன்கள் கொடுத்தார்.
அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் நைல் விலகியுள்ளது, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
நைலுக்கு பதிலாக ஷனகா, வைஸ், கட்டிங் ஆகிய மூவரில் ஒருவரை அந்த அணி புதிதாகத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 தொடரில் ஏப்ரல் 5ம் திகதி நிலவரப்படி, ராஜஸ்தான் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வி என 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.