மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதா ராஜஸ்தான் ராயல்ஸ்? - சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்எல்ஏ
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டுள்ளதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
2025 ஐபிஎல் தொடரில். சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செயல்பட்டு வருகிறது.
இதுவரை விளையாடிய 8 போட்டிகளில், 2 வெற்றி, 6 தோல்விகளுடன், 4 புள்ளிகள் பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
ஏப்ரல் 19 ஆம் திகதி, லக்னோவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற, கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை லக்னோவின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் வீச, ஒரு விக்கெட்டை இழந்த ராஜஸ்தான், 6 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
மேட்ச் பிக்சிங்
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது 'மேட்ச் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தற்காலிக குழு ஒருங்கிணைப்பாளரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான ஜெய்தீப் பிஹானி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், "சொந்த மைதானத்தில் விளையாடும் போது எப்படி அவ்வளவு குறைவான ரன்களை (9 ரன்கள்) ஒரு அணியால் கடைசி ஓவரில் எடுக்க முடியாமல் போகும். இது குறித்து விசாரிக்க வேண்டும்." என்ற சதேகத்தை கிளப்பியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள ராஜஸ்தான் அணி நிர்வாகம், இந்த குற்றச்சாட்டு ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் மல்டி ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் (RMPL), ராஜஸ்தான் விளையாட்டு கவுன்சில் மற்றும் BCCI ஆகியவற்றின் நற்பெயர் மற்றும் நம்பகத்தன்மைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 'மேட்ச் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |