Playoffக்குள் நுழைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நெருக்கடி
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது அணியாக பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
டெல்லியில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் லக்னோ அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மங்கியது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த போட்டியின் முடிவு சாதகமாக அமைந்துவிட்டது.
Work. Starts. Now. ?? #HallaBol pic.twitter.com/KlVRtQ099u
— Rajasthan Royals (@rajasthanroyals) May 14, 2024
ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது அணியாக பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சென்னை அணி வென்றாக வேண்டும். ஒருவேளை தோல்வியுற்றால் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, 18ஆம் திகதி நடைபெற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |