ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகமுறை 220 ஓட்டங்களை சேஸ் செய்து சாதனை படைத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026-யின் 64வது போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது.

முதலில் ஆடிய லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்தது. மிட்சேல் மார்ஷ் 96 (57) ஓட்டங்களும், ஜோஷ் இங்கிலிஸ் 60 (29) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வைபவ் சூர்யவன்ஷி 93 (38) ஓட்டங்களும், துருவ் ஜுரேல் 53 (38) ஓட்டங்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 (23) ஓட்டங்களும் விளாசினர்.
முதல் அணி
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அதிக முறை 220+ ஓட்டங்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

நான்கு முறை ராஜஸ்தான் ராயல்ஸ் 220 ஓட்டங்களை சேஸ் செய்துள்ளது. 3வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் (3 முறை) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (3 முறை) அணியும், இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் (2 முறை) அணியும் உள்ளன.
அதே சமயம் அதிகமுறை 200+ ஓட்டங்களை செய்த அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை பின்னுக்குத்தள்ளி ராஜஸ்தான் ராயல்ஸ் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. மொத்தமாக 7 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் 200 ஓட்டங்களுக்கு மேல் சேஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |