ஐபிஎல் போட்டிக்காக மைதானத்தில் மேலே இருந்து பைக்குடன் குதித்த நபர் - வைரல் வீடியோ
ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் அணி வெளியிட்டுள்ள வீடியோ பல படங்களின் ஸ்டண்ட் காட்சிகளை மிஞ்சும் வகையில் உள்ளது.
15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு அணியும் வித்தியாசமான முறையில் தங்கள் அணி வீரர்கள் குறித்தும், ஜெர்சி பற்றியும் வீடியோ வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் அணி அசத்தும் பைக் ஸ்டண்டை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
Pink & blue. But all-new. ?
— Rajasthan Royals (@rajasthanroyals) March 15, 2022
The Rajasthan Royals official #IPL2022 match kit has been (express) delivered. ?️?#HallaBol | #GivesYouWiiings | @IamSanjuSamson | @yuzi_chahal | @ParagRiyan | @redbullindia pic.twitter.com/HW75lGusVN
இதற்காக ரெட் புல் சாகச வீரர் ராபி மெடிசனை வைத்து திரைப்பட பைக் ஸ்டண்டையே மிஞ்சும் அளவுக்கு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீட்டின் சுவரில் பைக் ஓட்டுவது, சாலையில் வீலிங் செய்வது, போலீசார் தடுப்புகளை தாண்டுவது என அசத்தும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்ற நிலையில் இறுதியாக ராபி மெடிசன் மைதானத்தில் உச்சியில் இருந்து பைக் மூலம் கீழே குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அவர் புதிய ஜெர்சியை ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு வழங்கினார். இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ எடுத்த ராஜஸ்தான் கடைசியில் ஜெர்சியில் கோட்டைவிட்டது. பூமர் பபுள் காம் போல் ராஜஸ்தான் ஜெர்சி தோற்றம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் அந்த அணி ஆண்டுதோறும் ஜெர்சியை ஏன் மாற்றி வருகிறார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.