எப்படி போட்டாலும் சிக்ஸர், பவுண்டரி தான்! சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களை குவித்தது.
டூ-பிளெசிஸ் 25 ஓட்டங்களில் திவாட்டியா பந்துவீச்சில் அவுட்டாகினார். நீண்ட நாட்களுக்கு பின்னர் சுரேஷ் ரெய்னா 3-வது களமிறங்கினார். அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து வந்த மொயின் அலி 21 ஓட்டங்களிலும் அம்பாதி ராயுடு 2 ரன்னிலும் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் அதிரடியாக விளையாடி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார். ருதுராஜ் 60 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 101 ஓட்டங்கள் எடுத்தார்.
1⃣0⃣1⃣* Runs
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
6⃣0⃣ Balls
9⃣ Fours
5⃣ Sixes
Ravishing @Ruutu1331's remarkable ton ? ? #VIVOIPL #RRvCSK @ChennaiIPL
Sit back & relish this brilliant knock ? ?https://t.co/TZmS0HrNNX
இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.
190 ஓட்டங்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர்.
சாம் கரனின் முதல் 1 பவுண்டரியுடன் தொடங்கினாலும், ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 2-வது ஓவரில் ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகள் விளாசி அதிரடியைத் தொடக்கி வைத்தார்.
இதன்பிறகு, எப்படிப் போட்டாலும் சிக்ஸரும், பவுண்டரியுமாக பறக்கத் தொடங்கியது. ஹேசில்வுட் வீசிய 5-வது ஓவரில் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி பறக்கவிட 20-வது பந்திலேயே அரைசதத்தை எட்டினார்.
Take us home, boys ⏳#RRvCSK | #HallaBol | #RoyalsFamily | @IamSanjuSamson | @IamShivamDube pic.twitter.com/m82cWV0vrz
— Rajasthan Royals (@rajasthanroyals) October 2, 2021
5 ஓவர்களில் ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 75 ஓட்டங்கள் எடுத்துவிட்டது. 6-வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்குர் லீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.
கேஎம் ஆசிப் வீசிய அடுத்த ஓவரில் ஜெய்ஸ்வாலும் 21 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டம் சென்னை கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானம் காட்ட ஷிவம் துபே விளாசத் தொடங்கினார்.
வெற்றிக்குத் தேவையான ரன்ரேட் ஓவருக்கு 9.5 ஆக இருந்தது, படிப்படியாக 8-க்குக் கீழ் குறைந்தது. இந்த பாட்னர்ஷிப்பைப் பிரிக்க முடியாமல் சென்னைப் பந்துவீச்சாளர்கள் திணறினர். விளைவு துபேவும் 31-வது பந்தில் அரைசத்தை எட்டினார்.
வெற்றியை நெருங்கியபோது சஞ்சு 28 ஓட்டங்களுக்கு ஷர்துல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த கிளென் பிலிப்ஸ் மற்றும் துபே ராஜஸ்தான் வெற்றியை உறுதி செய்தனர்.
17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துபே 42 பந்துகளில் 64 ஓட்டங்கள் எடுத்தார். பிலிப்ஸ் 8 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்தார்.