நான்கு விக்கெட்டுகளை தூக்கி சாப்பிட்ட சாஹல்.! ஐதராபாத்தை தொம்சம் செய்த ராஜஸ்தான் ராயல்!
சாஹல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2023 ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஐதராபாத்தை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் நாணய சுழற்சியை வென்ற ஐதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் யயஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
ராஜஸ்தான் ராயல் அதிரடி
IPL
ஆரம்பமே அதிரடி காட்டிய இந்த ஜோடியால் அணியின் எணிக்கை ரொக்கெட் வேகத்தில் உயர்ந்தது. வெறும் பவுண்டரி, சிக்சர்களில் மட்டுமே மிரட்டிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 85 ஓட்டங்கள் குவித்தனர்.
அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 22 பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 37 பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 2 ஓட்டங்களிலும், அடுத்த வந்த ரியான் பராக் 7 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஷிம்ரன் ஹெட்மையர் சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார்.
IPL
மூன்று பேர் அரைசதம்
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம்சன் 28 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 32 பந்தில் 55 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து ரவிச்சந்திரன் அஷ்வின் களமிற்ங்கினார். இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் குவித்தது.
ராஜஸ்தான் தரப்பில் பட்லர் 54 ஓட்டங்கள், ஜெய்ஸ்வால் 54 ஓட்டங்கள், சாம்சன் 55 ஓட்டங்கள் எடுத்தனர்.
IPL
ஹைதராபாத் ஆட்டம் - ஆரம்பமே ஏமாற்றம்
இதையடுத்து 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா , மயங்க் அகர்வால் களமிறங்கினர். அபிஷேக் சர்மா ஓட்டம் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் திரிபாதியும் ஓட்டம் எதுவும் எடுக்காமல் (0) ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஹரி புரோக் 13 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 1 ஓட்டத்திலும், ஹெலென் பிலிப்ஸ் 8 ஓட்டங்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
IPL
சற்று நிலைத்து நின்ற மயங்க் அகர்வால் 27 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அப்துல் சமாத் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
IPL
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றிபெற்றது. ஐதராபாத் அணியின் அப்துல் சமாத் 32 ரன்னிலும், உம்ரான் மாலிக் 19 ரன்னிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
யுவேந்திர சாஹல் நான்கு விக்கெட்டுகள்
சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியின் யுவேந்திர சாஹல் 4 ஓவரில் 17 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
IPL