அடித்து நொறுக்கிய ஹெட்மயர்... பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள்
முல்லன்பூரில் நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக அதர்வ தைடே மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இதில் அதர்வா தைடே 18 ஓட்டங்களிலும், அடுத்து வந்த ப்ரப்சிம்ரன் சிங் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து பேர்ஸ்டோவுடன் கேப்டன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். இதில் பேர்ஸ்டோ( 15 ), சாம் கர்ரன்( 6 ), அடுத்து களம் இறங்கிய ஷஷாங் சிங்( 9 ) ஓட்டங்கலிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா - லிவிங்ஸ்டன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் ஜித்தேஷ் சர்மா 29 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 ஓட்டங்களும், ஜித்தேஷ் சர்மா 29 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஹெட்மயர் 10 பந்துகளில் 27 ஓட்டங்கள்
இதையடுத்து 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , தனுஷ் கோட்யான் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர்.
தொடக்க விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தனுஷ் கோட்யான் 24 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து 9 ஓட்டங்களில் ஜெய்ஸ்வால் ஏமாற்றமளிக்க, அடுத்து வந்த அணித்தலைவர் சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 18 ஓட்டங்களும் , ரியான் பராக் 18 பந்துகளில் 23 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பஞ்சாப் அணியின் அர்ஷிதீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஹெட்மயர் 2 சிக்சர்கள் பறக்க விட்டார்.
இதனால் ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 152 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. ஹெட்மயர் 10 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |