ருத்ர தாண்டவம் ஆடிய இருவர்! இறுதிவரை போராடிய வார்னர்..ராஜஸ்தான் ராயல்ஸ் மிரட்டல் வெற்றி
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
பட்லர் - ஜெய்ஸ்வால்
ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 51 பந்துகளில் 79 ஓட்டங்களும், ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் 60 ஓட்டங்களும் விளாசினர். இருவரும் தலா ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளை அடித்தனர்.
@Twitter (josbuttler)
இறுதிகட்டத்தில் வாணவேடிக்கை காட்டிய ஹெட்மயர் 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ஓட்டங்கள் எடுத்தார்.
??????. ????????. ???????. ? pic.twitter.com/6QncaRoME0
— Rajasthan Royals (@rajasthanroyals) April 8, 2023
சரிந்த விக்கெட்டுகள்
அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் டேவிட் வார்னர் வெற்றிக்காக போராடினார்.
மறுபுறம் அவருக்கு கைகொடுத்த லலித் யாதவ் அதிரடியாக 24 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களை சஹால், அஷ்வின் மற்றும் சந்தீப் சர்மா வெளியேற்றினர்.
@Twitter (yuzi_chahal)
வார்னர் அரைசதம்
டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களே எடுத்ததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டேவிட் வார்னர் 55 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் குவித்தார். ராஜஸ்தான் அணியின் தரப்பில் போல்ட் மற்றும் சஹால் தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
@Twitter (yuzi_chahal)