துலிப் தொடரில் நொறுக்கிய பட்டிதார்! 198 ஓட்டங்கள் விளாசி களத்தில் நிற்கும் வீரர்
துலிப் தொடரில் சென்ட்ரல் ஸோன் அணித்தலைவர் ரஜத் பட்டிதார் அதிரடியாக 125 ஓட்டங்கள் விளாசினார்.
ஆர்யன் ஜுயல் 60 ஓட்டங்கள்
நார்த் ஈஸ்ட் ஸோன் மற்றும் சென்ட்ரல் ஸோன் அணிகளுக்கு இடையிலான துலிப் டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது.
சென்ட்ரல் ஸோன் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆயுஷ் பாண்டே 3 ஓட்டங்களில் வெளியேற, ஆர்யன் ஜுயல் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரிடையர் ஹர்ட்டால் சென்றார்.
அடுத்து அணித்தலைவர் ரஜத் பட்டிதார், டேனிஷ் மலேவார் இருவரும் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினர்.
பட்டிதார் அதிரடி
ருத்ர தாண்டவமாடிய ரஜத் பட்டிதார் (Rajat Patidar) 96 பந்துகளில் 3 சிக்ஸர், 21 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்கள் விளாசினார்.
மறுமுனையில் மலேவார் 150 ஓட்டங்களை கடக்க, சென்ட்ரல் அணி முதல் நாள் முடிவில் 432 ஓட்டங்கள் (77) ஓட்டங்கள் குவித்துள்ளது.
டேனிஷ் மலேவார் ஆட்டமிழக்காமல் 198 (219) ஓட்டங்கள் எடுத்துள்ளார். யாஷ் ரத்தோட் 32 (37) ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |