யானைகள் கூட்டத்தின் மீது மோதிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்: தடம் புரண்ட 5 பெட்டிகள்: பெரும் பரபரப்பு
அசாமில் யானை கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
யானைகள் கூட்டத்தின் மீது மோதிய ரயில்
சனிக்கிழமை அதிகாலை அசாம் மாநிலத்தின் ஹோஜாய் மாவட்டத்தில் யானைகள் கூட்டத்தின் மீது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது கோர விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது.

இதில் 8 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன, அத்தோடு இந்த மோதலின் தாக்கத்தில் ரயிலின் என்ஜின் உட்பட 5 பெட்டிகள் தடம் புரண்டன.
மேலும் இந்த விபத்தில் குட்டி யானை ஒன்று பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு இருப்பதாக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மிசோரம் சாய்ராங்கிலிருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதிகாலை 2.17 மணியளவில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
உயிர் தப்பிய பயணிகள்

இந்த விபத்தின் போது 5 பெட்டிகள் தடம் புரண்ட போதிலும் அதிர்ஷ்டவசமாக ரயில் பயணிகள் யாருக்கும் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
சம்பவத்தை தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு மீட்பு ரயில்கள், உயர் அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் விபத்து ஏற்பட்ட இடம் அதிகாரப்பூர்வமான யானை வழித்தடம் இல்லை என்று தகவல் தெரியவந்துள்ளது.
யானைகளை ரயில் ஓட்டுநர் பார்த்த பின் உடனடியாக அவசர கால பிரேக்குகளை பயன்படுத்தியுள்ளார், இருப்பினும் இந்த விபத்து தவிர்க்க முடியாததாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |