நடிகர் தனுஷ் கட்சி ஆரம்பிப்பது உறுதி - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்
rajendra balaji says dhanush surely will start party: நடிகர் தனுஷ் கட்சி ஆரம்பிப்பது உறுதி என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அரசியலில் இறங்கும் தனுஷ்
நடிகர் தனுஷ் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் இறங்கும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மன்றத்தை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்ததோடு, நற்பணி இயக்கமாக மாற்றினார்.

டெல்லியில் கடந்த வாரம் தங்கி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த வாரம் மகளிரணியை சேர்ந்த 3,000 பேரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "சி பிளானின் படி ஒரு நடிகரை தயார் செய்து வருகிறது பாஜக. தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த டெல்லியில் அமித் ஷாவிடமிருந்து உருவாகும் ‘ஆபரேஷன் டி’ திட்டம் தான் நடிகரின் அரசியல் திட்டம்" என பேசினார்.
கட்சி ஆரம்பிப்பது உறுதி
இந்நிலையில், தனுஷ் கட்சி தொடங்குவது உறுதி என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனுஷ் பாஜகவில் இணைகிறாரா? இல்லையா? என்பது தெரியாது ஆனால் உறுதியாக கட்சி ஆரம்பிக்கிறார். தனுஷ் கட்சி துவங்கும் தகவல்கள் அவரது நண்பர்கள் மூலமாக எனக்குத் தெரிய வந்துள்ளது.
பாஜகவின் 4வது டீம் தனுஷ் என்றால், முதல் டீம் தவெகவா? தனுஷ் மீது பயம் உள்ளதால்தான் அவரைப் பற்றி பேசுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தினர் விபத்தில் ஆட்சியைப் பிடித்தவர்கள். அதேபோல வேறு யாரும் வந்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கத்தானே செய்யும்? நிச்சயம் இந்த ஆட்சிக்கு ஓர் ஏமாற்றம் காத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.