நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும்! அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் புகார்
நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஷ்வரி பிரியா டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பாடலுக்கு எதிர்ப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள 'நா ரெடி' பாடல் சமீபத்தில் வெளியானது.
இதில் இடம்பெற்ற வரிகளுக்கு கண்டனம் எழுந்தது. மேலும் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிக்கு சில அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
நடிகர் விஜய் மீது புகார்
இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஷ்வரி பிரியா இன்று டி.ஜி.பி அலுவலகத்தில் நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், நா ரெடி பாடலில் விஜய் புகைபிடிப்பது, மது பழக்கத்திற்கு அடிமையாக்கும் வரிகள் மற்றும் காட்சிகள் உள்ளன. அதனை குறிப்பிட்டு சமூக வளைதளத்தில் பதிவிட்டபோது விஜய்யின் ரசிகர்கள் ஆபாசமாகவும், அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் கருத்துக்களை பதிவிட்டனர்.
நடிகர் விஜய் தான் தன்னுடைய ரசிகர்களுக்கு காசு கொடுத்து இவ்வாறு செய்ய சொல்லியுள்ளார். எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |