விஜயை தளபதி என்று சொன்னால் தமிழ் இனத்திற்கே களங்கம்; ராஜேஸ்வரி பிரியாவின் அதிரடி பேட்டி!
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி மக்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அதன் தலைவராக இருந்து வரும் ராஜேஸ்வரி பிரியா, அண்மையில் வெளியான நடிகர் விஜயின் லியோ படப்பாடலான 'நான் ரெடி' பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.
லியோ பாடலின் சர்ச்சை
நடிகர் விஜயை பெரியவர்கள் முதல் சிறய குழந்தைகள் வரை ரசித்து பார்த்துக்கொண்டிருகின்றார்கள்.
அப்படியிருக்கையில் அந்த பாடலானது புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை ஊக்குவிப்பதை போன்று உள்ளது.
ஆகவே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் வரிகளை பாடலில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் லங்காசிறியின் நெறியாளர் ராஜேஸ்வரி பிரியாவிடம் நேர்காணலில் கலந்துக்கொண்ட பொழுது அவர் தெரிவித்திருந்த கருத்து,
நடிகர் விஜயை தளபதி என்று எல்லாம் கூற வேண்டாம். அவர் எந்த போருக்கு சென்றார்? எத்தனை பேரை திருத்தி எடுத்தார் என்று தளபதி என்று கூறுகின்றீர்கள்? அவரை அப்படி சொல்வதற்கு அவசியமே இல்லை. அதையும் மீறி பேசினால் அதை நான் தமிழ் இனத்திற்கே இழுக்காக நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ராஜேஸ்வரி பிரியாவின் கருத்துகளை தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பாருங்க!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |