வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய நடிகர் ரஜினிகாந்த்
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நடிகர் ரஜினி சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த்
சென்ற வாரத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடுமையாக வெள்ளம் பாதித்தது.
அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் நேரில் சென்று ஆய்வு நடந்தி வருகின்றனர். முதல்வர் முக.ஸ்டாலினும் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Wikimedia
சென்னை வெள்ள பாதிப்பிற்கு ஆதரவு கொடுத்த அளவிற்கு, தென் தமிழக பாதிப்புக்கு சினிமா பிரபலங்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் சார்பில் இன்று முதல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வெள்ளப் பாதிப்பின் போது தனது பிறந்தநாளன்று இதேபோன்று நிவாரணப் பொருட்கள் ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |