நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான்: நடிகர் ரஜினிகாந்தின் புத்தாண்டு வாழ்த்து
பிரபல நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் பதிவில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. புது வருடத்தை பலரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த "பாட்ஷா" படத்தில் இடம்பெற்ற வசனம் ஒன்றை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பதிவில், "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.
— Rajinikanth (@rajinikanth) January 1, 2025
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |