ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடி ரூ.1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய வேலைக்காரி... அதிர்ச்சி தகவல்...!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடி ரூ.1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய வேலைக்காரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்து
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து வந்தார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வந்தனர்.
ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படம்
இதனையடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் படங்களை இயக்க வந்துவிட்டார். லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘லால் சலாம்’ படத்தை ஐஸ்வர்யா இயக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டு லாக்கரில் இருந்த தங்க நகைகள், வைரம், நவரத்தின கற்கள் காணாமல் போனது. இதனையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பான வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு என 3 இடங்களில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, போலீசார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்யும் ஈஸ்வரியின் வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ரூ.1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய வேலைக்காரி
இதனையடுத்து, ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோலிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்திற்கு நிலம் வாங்கியுள்ளார்.
இந்த கடனை ஈஸ்வரி இரண்டே வருடங்களில் திருப்பி செலுத்தினார். இதனால், போலீசாருக்கு அவர் மேல் சந்தேகத்தை அதிகரிக்க, ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து நகைகளை திருடியதை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார்.
திருடிய நகைகளை சென்னை மைலாப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஈஸ்வரி விற்பனை செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஈஸ்வரியிடமிருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்களிடமிருந்து, 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளிக்கட்டிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் குற்றச்செயலில் ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் வெங்கடேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் 4 வருடங்களாக சிறுக சிறுக தங்க வைர நகைகளை திருடி சுமார் 1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.