72 வயதில் 210 கோடி ரூபாய் சம்பளம் சம்பளம் வாங்கிய தென்னிந்திய நடிகர்
ஷாரூக்கான், சல்மான் கான், பிரபாஸ் ஆகியோரைவிட அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்னும் பெயரை சம்பாதித்துள்ளார் 72 வயது தென்னிந்திய நடிகர் ஒருவர்.
ஒரு திரைப்படத்துக்கு 210 கோடி ரூபாய்
அப்படி ஒரு படத்துக்கு அதிக சம்பளம் வாங்கிய அந்த நடிகர், ரஜினிகாந்த்தான்...
2023ஆம் ஆண்டு, ஜெயிலர் படத்துக்காகத்தான் 72 வயதுள்ள ரஜினிகாந்துக்கு 210 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.
உண்மையில், ஜெயிலர் படத்துக்காக ரஜினிக்கு பேசப்பட்ட சம்பளம் 110 கோடி ரூபாயாம். ஆனால், படத்தின் வசூல் 600 கோடியைத் தாண்டவே, படத்தின் தயாரிப்பாளரான கலாநிதிமாறன், ரஜினிக்கு போனஸாக 100 கோடி ரூபாய் கூடுதலாக கொடுத்தாராம்.
ஆக, ஜெயிலருக்காக 210 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி, இளம் நடிகர்களான ஷாரூக்கான், சல்மான் கான், பிரபாஸ் ஆகியோரையே மிஞ்சிவிட்டார் ரஜினிகாந்த்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |