அனிருத்- காவ்யா திருமணத்தில் நடனமாடிய ரஜினிகாந்த்
Rajinikanth Dance in Anirudh- Kavya Marriage: அனிருத் ரவிச்சந்தர்- காவியா மாறன் திருமண கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
குடும்ப உறவினர்கள் சொந்த பந்தங்கள் கலந்து கொள்ள மிக பிரம்மாண்டமாக கிரீஸில் திருமணம் செய்து கொண்டனர்.
Superstar Rajinikanth dancing in Anirudh wedding 🕺🏻 https://t.co/jfB5KAU6Sn
— ORCHESTRAL GURL 🐥 (@metroproposal) November 11, 2026
அனிருத்- காவ்யா திருமணம்
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, My once in a lifetime, for a lifetime 11.11 என தலைப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அனிருத்.
கோல்டன் நிற உடையில் வேஷ்டியுடன் குர்தா, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய நீண்ட ஜாக்கெட்டையும் அணிந்திருந்தார் அனிருத்.
எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய இளஞ்சிவப்பு நிற லெஹங்காவுடன் பிரத்யேகமான வேலைப்பாடுகளுடன் கூடிய சோக்கர் மற்றும் காதணிகளுடன் தங்க தாரகையாக ஜொலித்தார் காவ்யா மாறன்.
கொண்டாட்டங்கள்
திருமணத்தில் பங்கேற்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் குடும்பத்துடன் கிரீசுக்கு சென்றனர், விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலாகின.
சொந்த பந்தங்கள் சூழ திருமண நிகழ்வின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் பட பாடலான மனசிலாயோ பாடல் ஒலிபரப்பாக ரஜினிகாந்த் நடனமாடும் காட்சிகள் வைரலாகிவருகிறது.
அவரை மணமக்கள் உட்பட அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர்.
