21 வயது குறைவான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
காலில் விழுந்த ரஜினிகாந்த்
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது பெரும் விவாதப்பொருளாக மாறியது.
தன்னை விட 21 வயது குறைவானவரின் காலில் விழுந்திருக்கிறாரே ரஜினிகாந்த் என சில அரசியல் தலைவர்களும் அவரை விமர்சித்தனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், 'வயது குறைவானவராக இருந்தாலும், சன்னியாசியின் காலில் விழுந்து வணங்குவது எனது பழக்கம்.
நட்பு ரீதியாக மட்டுமே உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சென்று வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழக மக்களுக்கு எனது நன்றி' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |